அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது புதிய ஹூண்டாய் காம்பெக்ட் எஸ்யூவி!
அடுத்த ஆண்டு புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம். ஹூண்டாய் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு மூத்த அதிகாரி ராகேஷ் ஸ்ரீவத்சவா புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பீஜிங் மோட்டார் ஷோவில் ஐஎக்ஸ்25 என்ற புதிய காம்பெக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவியில் சில மாற்றங்களை செய்து புதிய பெயரில் இந்திய மார்க்கெட்டில் வெளியிட ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி 4,270 மிமீ நீளம் கொண்டது என்பதால் வரிச் சலுகை கிடைக்காது. எனினும், ரெனோ டஸ்ட்டர் போன்று இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவிக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று ஹூண்டாய் நம்புகிறது.
இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய எஸ்யூவியின் டிசைன் இந்திய வாடிக்கையாளர்களை எளிதாக கவரும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








