ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு 'இமாலய' முன்பதிவு!
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 4 மாதங்களில் 56,000 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு முந்தைய தலைமுறை மாடலுக்கு கூட இந்தளவுக்கு வரவேற்பு இருந்ததில்லை. கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதலே இந்த புதிய எலைட் ஐ20 மாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

கடந்த மாதம் மட்டும் 10,500 எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் மாடல்களிலேயே குறுகிய காலத்தில் அதிக முன்பதிவுகளை பெற்ற மாடல் என்ற பெருமையும் புதிய எலைட் ஐ20 காருக்கு கிடைத்திருக்கிறது.
சிறப்பான டிசைன், வசதிகள், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான எஞ்சின் சாய்ஸ் போன்றவவை இந்த புதிய மாடலுக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்த நிலையில், புதிய எலைட் ஐ20 காருக்கான காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில், உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








