ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு அமோக முன்பதிவு!
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 20 நாட்களில் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் சிறப்பான முன்பதிவு எண்ணிக்கையை பெற்றுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ப்ளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த காரின் தோற்றம் வழக்கம்போல் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை பெற உதவியிருக்கிறது.

தவிரவும், வசதிகள், சிறப்பான எஞ்சின், மைலேஜ் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 20 நாட்களில் 79,200 விசாரணைகள் வந்துள்ளது. இதில், 15,300 பேர் இந்த புதிய காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களில் குறுகிய நாட்களில் அதிக முன்பதிவு எண்ணிக்கையை பெற்ற காராகவும் இது பெருமை பெற்றுள்ளது. ரூ.4.90 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








