சென்னையில் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் கிராஸ்ஓவர் மாடல் சோதனை!
சென்னையில் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கிராஸ்ஓவர் மாடல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஹேட்ச்பேக் கார்களின் அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடல்களை அறிமுகம் செய்வதில் பல நிறுவனங்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன. அதன்படி, ஃபோக்ஸ்வேகன் போலோ கிராஸ், டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் போன்ற கார்கள் வந்தன. இந்த நிலையில், சமீபத்தில் ஃபியட் புன்ட்டோ எவோ காரின் அடிப்பைடயிலான அவென்ச்சுரா கிராஸ்ஓவர் விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில், டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்ஓவர் மாடலுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 5,400 பேர் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த செக்மென்ட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக எலைட் ஐ20 கார் அடிப்படையிலான புதிய கிராஸ்ஓவர் மாடலை ஹூண்டாய் வடிவமைத்துள்ளது.
தற்போது இந்த கார் சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய டிசைனிலான அலாய் வீல்கள், பாடி கிளாடிங், ரூஃப் ரெயில்கள் போன்ற கிராஸ்ஓவருக்கு உரிய கூடுதல் ஆக்சஸெரீஸ் கொண்டதாக இந்த மாடல் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.
ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








