சிறப்பான முன்பதிவு எண்ணிக்கையை பதிவு செய்த புதிய எலைட் ஐ20 கார்

By Saravana

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு இதுவரை 12,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 11ந் தேதி புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. டிசைன் மாற்றங்கள், கூடுதல் வசதிகளுடன் வந்த புதிய எலைட் ஐ20 கார் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

New Hyundai Elite i20

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

விரைவில் டீசல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ப்ளூயிடிக் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய எலைட் ஐ20 காரும் டிசைனில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

எனவே, முன்பதிவு எண்ணிக்கை தொடர்ந்து நல்ல எண்ணிக்கையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 30, 2014, 10:21 [IST]
English summary
The Elite i20 has been launched in India at an affordable price of INR 4,90,000 ex-showroom, Delhi. Hyundai showrooms report to have received approximately 12,000 booking for their new premium hatchback in India, since its launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+