1.0 லிட்டர் கப்பா எஞ்சினுடன் விற்பனைக்கு வந்தது ஹூண்டாய் இயான்

By Saravana

புதிய 1.0 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சினுடன் ஹூண்டாய் இயான் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், 800சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் எஞ்சினுடன் வந்துள்ள டட்சன் கோ காரின் நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் இந்த புதிய இயான் காரை ஹூண்டாய் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. மேக்னா ப்ளஸ் வேரியண்ட்டில் 1.0 லிட்டர் எஞ்சினுடன் இயான் கார் கிடைக்கும்.

Hyundai Eon

யூரோ- 5 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட இந்த புதிய 1.0 லிட்டர் எஞ்சின் 69 என்எம் டார்க்கை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

ரூ.3.83 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட ஹூண்டாய் இயான் கார் விற்பனைக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 8, 2014, 11:23 [IST]
English summary
The South Korean manufacturer Hyundai motors has introduced the new 1.0-litre Kappa engine in the Eon to compete against Rival Datsun GO. The new Kappa engine will be priced at INR 3,83,130 (ex-showroom Delhi). It will be only available in their Magna+ trim Eon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+