தீபாவளி ரிலீசாக வரும் புதிய ஹூண்டாய் ஐ20 கார்!

By Saravana

வரும் தீபாவளி பண்டிகையையொட்டி புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய புளூயிடிக் டிசைனில் வரும் இந்த புதிய ஐ20 கார் தற்போது சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

சோதனைகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஹூண்டாய் விரைவில் மேற்கொள்ள உள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சியை தொடர்ந்து ஸ்லைடரில் படிக்கலாம்.

டிசைன்

டிசைன்

புதிய புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் இந்த காரை ஹூண்டாய் டிசைன் செய்துள்ளது. இதனால், தற்போதைய மாடலைவிட அழகு கூடியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஐ20 கார் தற்போதைய மாடலின் எஞ்சின் ஆப்ஷன்களிலேயே வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சினுடன் வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலுடன், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலிலும் வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இடவசதி

இடவசதி

தற்போதைய மாடலைவிட கூடுதல் உயரத்துடனும், வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு உள்புறத்தில் அதிக இடவசதி கொண்டதாகவும் இருக்கும்.

வசதிகள்

வசதிகள்

கூடுதல் வசதிகளும் புதிய ஐ20 காரில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் தற்போதைய மாடலைவிட கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐ20 கார் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அக்டோபரில் நடைபெற உள்ள பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 28, 2014, 9:58 [IST]
English summary
The South Korean manufacturer of four wheelers Hyundai has been providing Indians with several cars for a long period now. They sell the i20 hatchback in India which, is very popular among the buyers. They have now decided to give the i20 a facelift. Hyundai plan to launch the new facelifted i20 in November this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+