அதிக இடவசதியுடன் வருகிறது ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்!
கேபினில் அதிக இடவசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய ஹூண்டாய் ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை அருகிலுள்ள ஹூண்டாய் ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்து இந்த புதிய மாடல் தற்போது சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

வெளிப்புறத் தோற்றத்தில் ஆங்காங்கே புதிய மாற்றங்களுடன் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் வருகிறது. குறிப்பாக, பின்புறம் கவர்ச்சியாக இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பெட்ரோல் மாடலில் 83 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் கப்பா எஞ்சினும், டீசல் மாடலில் 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும்.
புதிய ஐ20 மாடலில் 5 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். தவிர்த்து, பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட, ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வரும் புதிய ஐ20 காரின் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், உட்புறத்தில் பயணிகளுக்கான இடவசதி அதிகமாக இருக்கும் என்பது இதன் குறிப்பிடத்தக்க அம்சமாக கூறலாம்.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக...!!


Click it and Unblock the Notifications








