பெங்களூரில், ஹூண்டாய் ஐ20 ரிவர்ஸ் டிரைவ் போட்டி: வாடிக்கையாளர் ஆர்வரம்
பெங்களூரில், ஹூண்டாய் ஐ20 காரை பின்புறமாக ஓட்டும் போட்டி நடைபெற்றது. இதில், ஐ20 கார் உரிமையாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் மிகச்சிறந்த கார் மாடலாக ஹூண்டாய் ஐ-ஜென் ஐ20 வலம் வருகிறது. இந்த நிலையில், இந்த காரில் இருக்கும் வசதிகளை எடுத்துக் காட்டும் விதத்தில், ஐ20 ரிவர்ஸ் ரெவொலியூஷன் டிரைவ் என்ற பெயரில் போட்டி ஒன்றுக்கு ஹூண்டாய் ஏற்பாடு செய்திருந்தது.

ஐ20 காரில் இருக்கும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சென்சார்கள், டிஸ்ப்ளே, எலக்ட்ரோ க்ரோமிக் மிரர் போன்ற பல வசதிகளை எடுத்தியம்பும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. ஃபேஸ்புக், இமெயில் மற்றும் குலுக்கல் போட்டிகள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ20 கார் வாடிக்கையாளர்கள் இதில் கலந்து கொண்டனர். கடந்த 17 மற்றும் 18ந் தேதி ஃபீனிக்ஸ் மாலில் நடந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட ஐ20 கார் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஹூண்டாய் லோகோ வடிவில் அமைக்கப்பட்டிருந்த டிராக்கில் ஐ20 காரை பின்புறமாக ஓட்டுவதே இந்த போட்டியின் முக்கிய அம்சம். இதில், சிறப்பாக காரை பின்புறமாக ஓட்டிய வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது ஒரு புதிய அனுபவமாக இருந்ததாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








