ஹூண்டாய் கார்களுக்கு பருவமழை கால சிறப்பு பரிசோதனை முகாம்!
பருவமழை காலத்தில் பிரச்னை இல்லாத பயண அனுபவத்தை பெறுவதற்காக கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்துகிறது ஹூண்டாய் கார் நிறுவனம்.
கடந்த 16ந் தேதி துவங்கியிருக்கும் இந்த சிறப்பு கார் பரிசோதனை முகாம்கள் நாடுமுழுவதும் பல கட்டங்களாக நடைபெறும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் நடைபெறும் இந்த சிறப்பு பரிசோதனை முகாம்களில் பருவ மழை காலத்துக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்படும். பிரேக், டயர்களின் நிலை, வைப்பர் இயக்கம், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் செயல்பாடுகள், கிளட்ச், சஸ்பென்ஷன் போன்றவற்றின் செயல்பாடுகளை பரிசோதனை செய்து தரப்படும்.
இதன் மூலம் பருவமழை காலத்தில் பிரச்னை இல்லாத பயண அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 25ந் தேதி முதல் இந்த சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








