அப்படியா... 40,000 புக்கிங்குகளை குவித்த ஹூண்டாய் எலைட் ஐ20 கார்!
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இரண்டே மாதங்களில் 40,000 முன்பதிவுகளை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பெற்றிருக்கிறது. மேலும், வாடிக்கையாளர் விசாரணைகளும் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுப்பொலிவுடன் கூடிய டிசைன் மற்றும் கூடுதல் வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. போட்டியாளர்களைவிட விலை அதிகம் இருந்தாலும், இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இந்த காரின் சிறப்பம்சங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்தான் காரணம்
புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூயிடிக் 2.0 டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியிலுள்ள ஹூண்டாய் டிசைன் மையத்தில் வடிவமைக்கப்பட்டது. எலைட் ஐ20 காருக்கு முன்பதிவு குவிந்து வருவதற்கு கவர்ச்சியான இதன் டிசைன் முக்கிய காரணமாக கூறலாம்.

எஞ்சின்
இந்த புதிய காரில் 83 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாகவும், 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் வந்துள்ளது. 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.60 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.54 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வசதிகள்
புதிய தலைமுறை எலைட் ஐ20 கார் நிரம்பிய வசதிகளுடன் வந்துள்ளது. பேஸ் மாடலான எரா வேரியண்ட்டில் பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி, சென்ட்ரல் லாக்கிங் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேக்னா வேரியண்ட்டில் ஃபோல்டு கீஷ ரியர் பார்சல் ட்ரே, முன்புற இருக்கைகளுக்கு ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளன. 1 ஜிபி மெமரியுடன் கூடிய 2டின் மியூசிக் சிஸ்டம் உள்ளது. ஆக்ஸ் போர்ட், யுஸ்பி போர்ட் வசதிகள் கொண்டவை. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளும் உண்டு.

பாதுகாப்பு வசதி
விபத்து ஏற்படும்போது தானியங்கி முறையில் கதவுகள் திறந்து கொள்ளும் வசதியும் முக்கியமானதாக குறிப்பிடலாம்.

வண்ணங்கள்
ரெட் பேஸன், பிர்ஸ்டைன் புளூ, மிஸ்டிக் புளூ, ஸ்டார் டஸ்ட், மிடாஸ் கோல்டு, போலார் ஒயிட் மற்றும் ஸ்லீக் சில்வர் ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்
பெட்ரோல்
எரா: ரூ.4.90 லட்சம்
மேக்னா: ரூ.5.42 லட்சம்
ஸ்போர்ட்ஸ்: ரூ.5.94 லட்சம்
அஸ்டா: ரூ.6.47 லட்சம்
டீசல்
எரா: ரூ.6.10 லட்சம்
மேக்னா: ரூ.6.62 லட்சம்
ஸ்போர்ட்ஸ்: ரூ.7.14 லட்சம்
அஸ்டா: ரூ.7.67 லட்சம்
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்)

கூடுதல் தகவல்களுக்கு...!
இந்த காரை பற்றிய முழு விபரங்களையும் அறிய விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








