ஹூண்டாய் ஐஎக்ஸ்25 காம்பேக்ட் எஸ்யூவி பற்றிய புதிய தகவல்கள்!
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 2014 பீஜிங் மோட்டார் ஷோவில் ஹூண்டாய் நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா உள்ளிட்ட மார்க்கெட்டுகளிலும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி வர இருப்பதால் இந்த எஸ்யூவி பற்றி பெரும் எதிர்பார்ப்பு தொடர்ந்து வருகிறது.
தற்போது நம் நாட்டில் பல்வேறு இடங்களில் வைத்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் வரும் அக்டோபர் 10ந் தேதி சீனாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி பற்றிய தகவல்கள் சீனாவை சேர்ந்த ஆட்டோமொபைல் தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

விற்பனைக்கு அறிமுகம்?
சீனாவின் குவாங்டாங் மாகாணத் தலைநகர் குவான்சூ நகரில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வேரியண்ட்டுகள்
சீனாவில் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் 8 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. 7 வேரியண்ட்டுகள் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும், டாப் வேரியண்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் கிடைக்கும்.

வடிவம்
இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி 4,270 மிமீ நீளமும், 1,780 மிமீ அகலமும், 1,622 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். இது 2,590 மிமீ வீல் பேஸ் கொண்டதாக வருவதால் கேபினில் மிகச்சிறப்பான இடவசதி இருக்கும்.

தயாரிப்பு நிலை
2014 பீஜிங் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஐஎக்ஸ்25 கான்செப்ட் எஸ்யூவிக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் வடிவமைப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் லைட் கிளஸ்ட்டருடன் அலங்காரமாகவும், அதேவேளை மிக ஸ்போர்ட்டியாகவும் இருக்கிறது.

எஞ்சின்
இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 122 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க்கையும் அளிக்கும். இதேபோன்று, 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 158 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் வருகிறது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வரும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்
இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் 1.6 லிட்டர் மாடல் 183மிமீ தரை இடைவெளி கொண்டதாகவும், 2.0 லிட்டர் எஞ்சின் மாடல் 180 மிமீ தரை இடைவெளி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ஏர்பேக்ஸ், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.
Image: auto.163.com


Click it and Unblock the Notifications








