புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இன்று விற்பனைக்கு வருகிறது!
வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது.
பெரும்பாலான டீலர்ஷிப்புகளை வந்தடைந்துவிட்ட புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு ஏற்கனவே முன்பதிவும் துவங்கிவிட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வரும் புதிய எலைட் ஐ20 கார் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் மட்டுமே கிடைக்கும்.
பெட்ரோல் மாடலில் 82எச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் 98 எச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் என இருவிதமான மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.
டீசல் மாடலில் 88.7 எச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.
முந்தைய மாடலைவிட ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை கூடுதலான விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய ஃபியட் புன்ட்டோ இவோ, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்களுடன் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








