புதிய சிட்டியை சமாளிக்க புதிய வெர்னா வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்
ஏராளமான சிறப்பம்சங்களுடன் மிக சவாலான விலையில், புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், மிட்சைஸ் மார்க்கெட்டின் லீடாரான ஹூண்டாய் வெர்னாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய நெருக்கடியை சமாளிக்கும் விதமாக வெர்னாவில் கூடுதல் வசதிகளுடன் புதிய வேரியண்ட்டை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. SX(o) என்ற அந்த புதிய வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 16 இஞ்ச் அலாய் வீல்கள் மற்றும் சில மாற்றங்களுடன் வந்துள்ளது.

இதுதவிர, வெர்னாிவ்ல CX என்ற புதிய டீசல் வேரியண்ட்டையும் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய டீசல் வேரியண்ட்டில் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது பேஸ் வேரியண்ட்டாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
விலைக்கு தகுந்த மதிப்பை பெறும் வகையில், எங்களது மாடல்களில் தொடர்ந்து பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தி வருகிறோம் என்று ஹூண்டாய் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








