விரைவில் ஹூண்டாய் இயான் ஃபேஸ்லிஃப்ட்!
அடுத்த ஆண்டு டிசைன் மாற்றங்களுடன் ஹூண்டாய் இயான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011ல் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் இயான் கார் ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட மாடல். இந்த நிலையில், ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட சில மாடல்கள் புளூயிடிக் 2.0 வெர்ஷனுக்கு மாறிவிட்டன.

எனவே, ஹூண்டாய் இயான் காரையும் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஹூண்டாய் மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு இந்த புதிய இயான் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டிருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிப்புறத்தில் மட்டுமின்றி, இன்டிரியரிலும் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கார்களை விரும்புவர்களுக்கு சரியான அதேநேரத்தில் கவர்ச்சிகரமான குட்டி கார் மாடலாக இதனை நிலைநிறுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் தொடர்ந்து கிடைக்கும் என்று நம்பலாம். புதுப்பொலிவுடன் வரும் இயான் கார் விலையில் சற்று கூடுதலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.3.83 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் தற்போது ஹூண்டாய் இயான் கார் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








