சீனாவில் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!
சீனாவில் ஹூண்டாய் வெர்னாவின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டு டீலர்ஷிப்புகளை அடைந்திருக்கும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டிசைனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்பக்க பானடர் டிசைன், ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் பனி விளக்குகள் என அனைத்தும் புதுப்பொலிவு கண்டுள்ளது.
இரண்டு குரோம் பட்டைகளுடன் கூடிய புதிய கிரில் டிசைன் கவர்ச்சியை கூடுதலாக்கிக் காட்டுகிறது. ஹெட்லைட்டுகளுடன் சேர்ந்த பகல்நேர ரன்னிங் விளக்குகளும் குறிப்பிடத்தக்கதாக கூறலாம்.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், சீன மாடலில் இருக்கும் அதே மாற்றங்களுடன் வருமா என்பது குறித்து தகவல்கள் இல்லை.
புதிய ஹோண்டா சிட்டி சமீபத்தில் விற்பனைக்கு வந்த நிலையில், ஹூண்டாய் வெர்னா சிறிது நெருக்கடியில் இருக்கிறது. இந்த நெருக்கடியை புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் போக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








