ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு விளம்பர தூதரானார் நடிகர் ஷாரூக்கான்!
புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரை பிரபலப்படுத்துவதற்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை விளம்பர தூதராக நியமித்துள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம்.
ஹூண்டாய் கார் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நடிகர் ஷாரூக்கான் தொடர்ந்து விளம்பர தூதராக பணியாற்றி வருகிறார். கடந்த 16 ஆண்டுகளாக ஹூண்டாய் நிறுவனத்துடன் நடிகர் ஷாரூக்கான் நெருங்கிய உறவை பேணி வருகிறார். சான்ட்ரோ காருக்கு முதல்முறையாக விளம்பர தூதராக பணியாற்றிய அவர் தற்போது எக்ஸ்சென்ட் கார் வரை அந்த உறவை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.

"ஹூண்டாய் நிறுவனத்துடன் 16 ஆண்டுகள் நெருக்கமான உறவை பேணி வருவது மட்டமற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. ஹூண்டாயுடன் பணிபுரிவது போன்ற எண்ணம் ஏற்படவில்லை. மாறாக, இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் ஒரு சிறந்த பிராண்டை முன்னிலைப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சியை உணர்கிறேன் என ஷாரூக்கான் தெரிவித்தார்.
புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் காம்பேக்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 81 பிஎச்பி பவரை அளிக்கும், 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 71 பிஎச்பி பவரை அளிக்கும் 1.1 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் ரூ.4.73 லட்சம் முதல் ரூ.7.44 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








