டெல்லி ஆட்டோ எக்ஸ்போ முதல் நாளில் 60,000 பார்வையாளர்கள் வருகை!
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச வாகன கண்காட்சியில் பத்திரிக்கையாளர்களுக்கான நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. முதல் நாளில் 60,000 பேர் வருகை புரிந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முதல் நாளில் சிறப்பு அனுமதி சீட்டுகளை தவிர்த்து, 35,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகியிருக்கும் புதிய மாடல்களை கண்டு ரசிக்கவும், வாங்குவதற்கான முடிவு எடுப்பதற்காகவும் பார்வையாளர்கள் ஆவலோடு சுற்றிப் பார்த்தனர்.

குறிப்பாக, எலக்ட்ரிக் கார்களுக்கான பெவிலியனில் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு பார்வையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதுதவிர, பாதுகாப்பான டிரைவிங் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்தன. இதுதவிர, விண்டேஜ் கார்களை பார்க்கவும் பார்வையாளர்களின் நெரிசல் அதிகம் தெரிந்தது.


Click it and Unblock the Notifications








