பாரீஸ் மோட்டார் ஷோவிலிருந்து இந்தியா வரும் முக்கிய கார் மாடல்கள்
பாரீஸ் மோட்டார் ஷோவில் பல புதிய மாடல்களை கார் நிறுவனங்கள் போட்டி போட்டு அறிமுகம் செய்து வருகின்றன. உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இந்த மோட்டார் ஷோவில் தங்களது புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அதுபோன்று, பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சில கார் மாடல்கள் விரைவில் நம் நாட்டு மார்க்கெட்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. அதில், முக்கியமான சில கார் மாடல்களை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.
கூடுதல் விபரங்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

புதிய ஜாகுவார் எக்ஸ்இ
ஜாகுவார் நிறுவனத்தின் புத்தம் புதிய கார் மாடல் என்பதோடு, குறைவான விலை மாடலாகவும் எக்ஸ்இ விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய இன்ஜெனியம் எஞ்சின், இலகு எடை கட்டமைப்பு, மிக ஸ்டைலான டிசைன் என பல விதத்திலும் வாடிக்கையாளர்களை காத்திருக்க செய்திருக்கிறது இந்த புதிய மாடல். அடுத்த ஆண்டு இறுதியில் இந்த புதிய கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பென்ஸ் பி கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட்
மிகச்சிறிய மாற்றங்களுடன் பென்ஸ் பி கிளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முகப்பு மற்றும் பின்புற டிசைனில் மாற்றங்களை செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. பென்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் இந்த மாடலுக்கு இந்த சிறிய மாற்றங்கள் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெறும்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்
இதுவும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் குறைவான விலை மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. புத்தம் புதிய டிசைன், லேண்ட்ரோவர் எஸ்யூவிக்கு உரிய கம்பீரம், வசதிகள் என பல சிறப்பம்சங்களை தாங்கி வருகிறது. டிஸ்கவரி பிராண்டில் வெளியிடப்பட உள்ள பல மாடல் எஸ்யூவிகளில் முதலாவது மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஸ்கோடா ஃபேபியா
இந்தியாவில் விற்பனையில் மிகவும் பின்தங்கியதால் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஸ்கோடா ஃபேபியாவின் புதிய மாடல் பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டிசைனில் மாற்றங்கள், கூடுதல் வசதிகளுடன் வரும் இந்த புதிய கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்கோடாவிடமிருந்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

ஃபோக்ஸ்வேகன் பஸாத் ஃபேஸ்லிஃப்ட்
இந்தியாவில் தொடர்ந்து ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை ஃபோக்ஸ்வேகன் களமிறக்கி வருகிறது. அந்த வகையில், போலோ, வென்ட்டோ கார்களைத் தொடர்ந்து அடுத்ததாக பஸாத் செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த புதிய கார் இந்தியா வரும் என தகவல்கள் கூறுகின்றன. புதிய முகப்பு டிசைன், 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினுடன் இந்த கார் வர இருக்கிறது. இதன் டீசல் மாடல் அதிசக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதோடு, மிகுந்த எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும் இருக்கும் என ஃபோக்ஸ்வேகன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா எச்ஆர்-வி
ஹோண்டா கார் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல்தான் எச்-ஆர்வி. ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட உள்ள இந்த எஸ்யூவி அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. நம் நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் மாடல்களில் ஒன்று. இதுதவிர, புதிய தலைமுறை ஜாஸ் கார் மற்றும் சிஆர்-வி -பேஸ்லிஃப்ட் மாடல்களும் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








