நிறுவனங்கள் வாரியாக கார்களின் விலை குறைப்பு விபரம்
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதான உற்பத்தி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, பல முன்னணி நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்து வருகின்றன.
சில நிறுவனங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பு சதவீதத்தின் படி, வாடிக்கையாளர்கள் முழு பலனையும் பெறும் விதத்தில் விலை குறைப்பை செய்துள்ளன. வரும் ஜூன் 30ந் தேதி வரை பொருந்தத்தக்கதாக இந்த விலை குறைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நிறுவனங்கள் வாரியாக விலை குறைப்பு அறிவிப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

நிசான்
நிசான் நிறுவனத்தின் கார்கள் விலை 4 முதல் 6 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. சன்னி, டெரானோ, எவாலியா, மைக்ரா, மைக்ரா ஆக்டிவ் ஆகிய அனைத்து மாடல்களுக்கும் இந்த விலை குறைப்பு பொருந்தும்.

ஃபோக்ஸ்வேகன்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முழு சலுகையையும் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் விலை குறைப்பு செய்துள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. போலோ காரின் விலை வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.18,000 முதல் ரூ.31,000 வரையிலும், வென்ட்டோ காரின் விலை ரூ.14,500 முதல் ரூ.31,000 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய ஜெட்டா காரின் விலை ரூ.38,000 முதல் ரூ.51,000 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

ஆடி
ஆடி கார்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஆடி க்யூ7 காரின் விலை ரூ.3 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.82.11 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஆடி க்யூ7 கார் இனி ரூ.78.28 லட்சத்தில் கிடைக்கும். இதேபோன்று, ஏ4 காரின் விலை ரூ.1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய்
ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களின் விலை ரூ.10,000 முதல் ரூ.1.35 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மஹிந்திரா
மஹிந்திரா கார்களின் விலை ரூ.13,000 முதல் ரூ.49,000 வரையிலும், சாங்யாங் பிராண்டில் விற்பனை செய்யப்படும் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் விலை ரூ.92,000 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா கார்ஸ்
அமேஸ் உள்பட அனைத்து ஹோண்டா கார்களின் விலையும் ரூ.14,650 முதல் ரூ.44,741 வரையில் குறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








