கார்களுக்கு 5 ஆண்டுகளுக்கான இன்ஸ்யூரன்ஸ் பாலிசி: ஐஆர்டிஏ., பரிசீலனை
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய கார் இன்ஸ்யூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்வது குறித்து காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்(ஐஆர்டிஏ) பரிசீலித்து வருகிறது.
தற்போது கார்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை பாலிசியை புதுப்பிக்க வேண்டியது பலருக்கு தொல்லை தரும் விஷயமாக இருக்கிறது.

மேலும், காப்பீட்டு கட்டணமும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், கார்களுக்கு 5 ஆண்டுகளுக்கான இன்ஸ்யூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்த ஐஆர்டிஏ திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், கார் இன்ஸ்யூரன்ஸ் கட்டணம் வெகுவாக குறையும். மேலும், 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கும் தொல்லையும் இருக்காது. இந்த திட்டத்தை முதலில் ஊரக பகுதிகளில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








