ரூ.5.99 லட்சம் ஆரம்ப விலையில் இசுஸு பிக்கப் டிரக் விற்பனைக்கு வந்தது
புதிய இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதிய பிக்கப் டிரக் மாடல் போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையிலேயே வந்துள்ளது.
அதேவேளை, இது அறிமுக சலுகை விலையாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, அடுத்த சில மாதங்களில் இந்த புதிய பிக்கப் டிரக்கின் விலை உயர்த்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், இந்த பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்பட்டதோடு, மும்பையில் தனது 9வது ஷோரூமையும் இசுஸு திறந்தது. மேலும், 2016ம் ஆண்டில் டீலர்ஷிப்புகளின் எண்ணிக்கையை 60 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஆந்திராவில் கட்டப்பட்டு வரும் புதிய இசுஸு ஆலையும் 2016ம் ஆண்டில்தான் செயல்பட துவங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று வேரியண்ட்டுகள்
புதிய இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக் மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டாப் வேரியண்ட்டில் குரோம் பூச்சு கொண்ட முன்பக்க கிரில், பாடி கலர் பம்பர் மற்றும் டோர் ஹேண்டில்கள், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், டில்ட் ஸ்டீயரிங், ஏசி போன்ற பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வேரியண்ட்டுகளிலும் பவர் ஸ்டீயரிங் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

உற்பத்தி
தாய்லாந்திலிருந்து பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு சென்னை, திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் இந்த புதிய டி மேக்ஸ் பிக்கப் டிரக் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதே ஆலையில்தான் இசுஸு நிறுவனத்தின் எம்யூ-7 எஸ்யூவியும் அசெம்பிள் செய்யப்படுகிறது.

எஞ்சின்
இந்த புதிய பிக்கப் டிரக்கில் 134 பிஎச்பி பவரையும், 294 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

பே லோடு
இந்த பிக்கப் டிரக்கில் 1,200 கிலோ எடையை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

விலை விபரம்
Single Cab: ரூ.5.99 லட்சம்
Space Cab with Flat Deck: ரூ.6.19 லட்சம்
Space Cab with Arched Deck: ரூ.7.09 லட்சம்
அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலை


Click it and Unblock the Notifications








