இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக் விற்பனை எப்போது?
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக் மற்றும் எம்யூ- 7 எஸ்யூவி மாடல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. எம்யூ- 7 எஸ்யூவி ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், இசுஸு டி- மேக்ஸ் விற்பனை குறித்து இசுஸு தகவல்களை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு மாடல்களில் இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களையும், விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

விற்பனை எப்போது?
இன்னும் 3 மாதங்களில் டி- மேக்ஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று இசுஸு தெரிவித்துள்ளது.

விலை
ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் இசுஸு டி -மேக்ஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆனால், பேஸ் மாடலை இதைவிட ரூ.50,000 குறைவான விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக இசுஸு தெரிவிக்கிறது. பால் வண்டிக்கான மாடல் ரூ.6.5 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ் மாடல்
பேஸ் மாடலில் பவர் விண்டோஸ், கப் ஹோல்டர்கள் மற்றும் ஏர்கண்டிஷன் போன்ற வசதிகள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக்கில் 134 எச்பி ஆற்றலையும், 294 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

டீசல் டேங்க்
இதில், 76 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








