2016ல் புதிய ஜாகுவார் எஸ்யூவியின் உற்பத்தி துவங்குகிறது!
வரும் 2016ம் ஆண்டில் ஜாகுவாரின் முதல் கிராஸ்ஓவர் காரின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் முதல் கிராஸ்ஓவர் மாடலாக வர இருக்கும் இந்த கார் தற்போது சிஎக்ஸ்17 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
ஜாகுவார் உருவாக்கி வரும் எக்ஸ்இ கார் போன்றே இந்த புதிய கார் மாடலும், முழுவதுமாக அலுமினியம் கட்டமைப்பில் உருவாகிறது. இதனால், இலகு எடை கொண்டதாக இருக்கும். மேலும், எக்ஸ்இ கார் ரியர் வீல் டிரைவ் அமைப்புடன் சேஸீ உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்குமா அல்லது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்குமா என்பது தெரியவில்லை.

போர்ஷேவுக்கு போட்டி
போர்ஷே மசான் எஸ்யூவிக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் இந்த புதிய மாடல் வருகிறது. ஸ்போர்ட்ஸ் கார் போன்று செயல்திறன் மிக்கதாகவும், எஸ்யூவி போன்ற தோற்றத்தை கொண்டதாகவும் கட்டமைக்கப்படுகிறது.

ஆனால்....
போர்ஷே மசானுடன் ஒப்பிட்டாலும், அதனைவிட கூடுதல் வீல் பேஸ் கொண்டதாக இருக்கும் என்பதால் அதிக உட்புற இடவசதி இருக்கும். மேலும், இது மசானைவிட இலகு எடை கொண்ட மாடலாகவும் வருகிறது.

போட்டி
லேண்ட்ரோவர் நிறுவனம் தொடர்ந்து ஆடம்பர மிக்க ஆஃப்ரோடு முழுமையான எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தும். அதேவேளை, ஜாகுவார் நிறுவனத்தின் சிஎக்ஸ்17 மாடல் ஆடம்பர அம்சங்கள் குறைவாகவும், கிராஸ்ஓவர் ரகத்திலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எஞ்சின்
ஜாகுவார்லேண்ட்ரோவர் கூட்டு நிறுவனங்கள் உருவாக்கி வரும் புதிய இன்ஜெனியம் எஞ்தின் இதில் பயன்படுத்தப்படும். இது குறைவான கார்பனை வெளியிடும் தன்மை கொண்டதாகவும், அதிக செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








