ஜாகுவாரின் குறைவான விலை கார்... நடுக்கத்தில் பென்ஸ், பிஎம்டபிள்யூ

By Saravana

டாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் பிரிட்டிஷ் பிராண்டான ஜாகுவார் புதிய செடான் கார் மாடலின் விபரங்களை வெளியிட்டிருக்கிறது. எக்ஸ்இ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந் புதிய கார் ஜாகுவாரின் குறைவான விலை செடான் கார் மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆடி ஏ4, பென்ஸ் சி கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுடன் இந்த புதிய ஜாகுவார் கார் போட்டி போடும். இந்த புதிய கார் மூலம் இதுவரை தொடாத பல புதிய மார்க்கெட்டுகளிலும், விற்பனை எண்ணிக்கையிலும் அடியெடுத்து வைக்க முடியும் என்று ஜாகுவார் நம்புகிறது.

அறிமுகம்

அறிமுகம்

ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அனைத்து விபரங்களையும் ஜாகுவார் வெளியிடவில்லை. குறைந்த தகவல்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறது.

மோனோகாக் சேஸீ

மோனோகாக் சேஸீ

புதிய அலுமினியம் மோனோகாக் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படும் முதல் ஜாகுவார் கார் இது. ஜாகுவாருக்கு மட்டுமல்ல, இந்த ரகத்தில் புதிய அலுமினியம் மோனோகாக் சேஸீயில் வடிவமைக்கப்படும் முதல் கார் என்ற பெருமையையும் பெறுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஜாகுவார் எக்ஸ்இ காரில் இன்ஜினியம் என்ற பெயரிலான புதிய எஞ்சின்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின்கள் இன்கேனியம் வரிசையில் வருகின்றன. இந்த எஞ்சின்கள் அதிக எரிபொருள் சிக்கனம், சிறப்பான மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களுடன் வருகிறது.

 விற்பனை

விற்பனை

இந்த ஆண்டு இறுதியில் இந்த காரின் முழு விபரங்கள் வெளியிடப்பட்டும். அடுத்த ஆண்டு மத்தியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வீடியோ

ஜாகுவார் எக்ஸ்இ காருக்கு வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ!

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2014, 10:11 [IST]
English summary
Jaguar is flourishing under the tutelage of Tata Motors and the British automaker is slowing starting to extending its reach and presence to newer territories which it previously did not have the strength to compete in.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+