புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக பிரத்யேக மாடலை வெளியிட்ட அஸ்டன் மார்ட்டின்!
புதிய ஸ்பெக்டர் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக பிரத்யேக அஸ்டன் மார்ட்டின் கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் 24வது சினிமாவின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க உள்ளது. இந்த படத்தில் டேனியல் கிரெய்க் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவருக்கு இது 4வது ஜேம்ஸ்பாண்ட் சினிமாவாகும்.

இந்தநிலையில், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஹீரோவுக்கு இணையாக கார்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதற்காக, பல பிரத்யேக கார் மாடல்கள் வடிவமைத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய ஸ்பெக்டர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார் மாடல் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய கார் மாடலை அஸ்டன் மார்ட்டின் வெளியிட்டிருக்கிறது. இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளதுடன், பொது விற்பனைக்கு செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்டன் மார்ட்டின் விஎச் பிளாட்ஃபார்மில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, வி8 வாண்டேஜ் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4.7 லிட்டர் வி8 எஞ்சின்தான் இந்த புதிய ஜேம்ஸ்பாண்ட் காரிலும் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த சினிமா படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த 10 கார்களும் விற்பனை செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை. இந்த கார் தவிர்த்து ஃபியட் 500 காரையும் ஸ்பெக்டர் படத்தில் பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் இருக்கிறது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெக்டர் படம் திரைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








