நம்பகத்தன்மையில் ஜப்பானிய கார்கள் சிறப்பானவை: ஆய்வில் தகவல்

By Saravana

ஜப்பானிய பிராண்டு கார்கள் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவையாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் நம்பகத்தன்மையில் சிறந்த கார் தயாரிப்புகளை கண்டறிவதற்காக நாடு வாரியாக ஆய்வு ஒன்றை இங்கிலாந்து அமைப்பு ஒன்று மேற்கொண்டது.

அதில், புள்ளிகளின் அடிப்படையில் எந்த நாட்டு தயாரிப்புகள் சிறப்பானதாக இருக்கிறது என்ற விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில், ஜப்பானிய பிராண்டுகளே முதலிடம் பிடித்துள்ளன.


ஆய்வு

ஆய்வு

ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா உள்பட மொத்தம் 8 நாடுகளின் தயாரிப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. குறைந்தபட்சம் 50,000 கிமீ தூரம் ஓடிய கார்கள் அல்லது 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.

மதிப்பீடு

மதிப்பீடு

இந்த ஆய்வுகளின்போது அதிக பிரச்னை தராத கார் மாடல்கள் எந்த நாட்டு தயாரிப்பு என்ற அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டன. அதாவது, குறைவான புள்ளிகளை பெறும் நாட்டின் தயாரிப்புகள் சிறப்பானவையாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் மிகக் குறைந்த பிரச்னைகளை கொண்ட தயாரிப்புகள் மூலம் ஜப்பான் முதலிடத்தை பெற்றுள்ளது.

புள்ளி விபரம்

புள்ளி விபரம்

ஜப்பானிய தயாரிப்புகள் 80 புள்ளிகளை பெற்ற முதலிடத்திலும், அடுத்ததாக 113 புள்ளிகளுடன் பிரான்ஸ் இரண்டாவது இடத்தையும், 123 புள்ளிகளுடன் தென்கொரியா மூன்றாவது இடத்தையும் பெற்றன. இதற்கடுத்து, 156 புள்ளிகளுடன் அமெரிக்கா நான்காவது இடத்தையும், 158 புள்ளிகளுடன் ஸ்வீடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்தன. உலக அளவில் மிக நம்பகமான கார்களாக கருதப்படும் ஜெர்மன் தயாரிப்புகள் 168 புள்ளிகளை பெற்று 6வது இடத்தையே பிடித்தன. இத்தாலி 170.5 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்தது. இதில், ஆய்வை நடத்திய இங்கிலாந்துக்கு கடைசி இடம்தான் கிடைத்தது. இங்கிலாந்து 209 புள்ளிகளை பெற்றது.

 நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை

விலை அடிப்படையிலும் மிகச்சிறந்த கார்களை தயாரிப்பதில் ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது. ஜெர்மனி ஆறாவது இடத்தை பிடித்தாலும் அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் நம்பகத்தன்மையற்றவையாக குறிப்பிட முடியாது. சில குறிப்பிட்ட மாடல்களின் மூலமே இந்த ஆய்வுகள் நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவான கார் வைத்திருப்பவர்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 15, 2014, 11:10 [IST]
English summary
We are proud to tell you that a recent test in United Kingdom has proved that Japanese vehicles are most reliable. It was, however, a sad day for British manufacturers as they were awarded last place among the eight nations that participated. So if you have a Japanese badged vehicle, you ought to celebrate as your can be with you for a lifetime.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+