வாடிக்கையாளர் திருப்தியை பெறுவதில் மாருதி, ஹோண்டா முன்னிலை!

By Saravana

வாடிக்கையாளர் திருப்தியை பெறுவதில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் மாருதி, ஹோண்டா மற்றும் எம்ஆர்எஃப் டயர் நிறுவனத்துக்கு ஜேடி பவர் ஆய்வு நிறுவனம் சிறப்பு விருதுகளை வழங்கியுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களும் 10க்கும் மேற்பட்ட முறை ஜேடி பவர் ஆய்வு நிறுவனத்தின் விருது பட்டியலில் முன்னிலை வகித்து வருகின்றன. கடந்த 13ந் தேதி டெல்லியில் நடந்த விழாவில் ஜேடி பவர் ஆய்வு நிறுவனத்தின் விருதுகள் வழங்கப்பட்டன.

வாடிக்கையாளர் சேவை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கார் உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார் நிறுவனங்கள் மற்றும் கார் மாடல்களுக்கு ஜேடி பவர் ஆய்வு நிறுவனத்தின் விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

மாருதிக்கு விருது

மாருதிக்கு விருது

வாடிக்கையாளர் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும், கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக வாடிக்கையாளர் சேவையில் மாருதி நிறுவனம் முன்னிலை வகித்து வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

 ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ்

ஆரம்ப நிலை தரத்தில் ஹோண்டா கார் நிறுவனம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக இந்த விருதை ஹோண்டா பெற்று வருவதையடுத்து, சிறப்பு விருது வழங்கப்பட்டது.

எம்ஆர்எஃப் டயர்ஸ்

எம்ஆர்எஃப் டயர்ஸ்

தரமான டயர்களை தயாரித்து வழங்கி வாடிக்கையாளர்களின் திருப்தியை தொடர்ந்து தக்க வைத்து வரும் எம்ஆர்எஃப் டயர் நிறுவனத்துக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மற்றொரு விருது

மற்றொரு விருது

ஒரிஜினல் டயருக்கான பிரிவில் வாடிக்கையாளர்களின் திருப்தியை பெறுவதில் முன்னிலை வகிக்கும் எம்ஆர்எஃப் நிறுவனம் மற்றொரு விருதையும் பெற்றது. இந்த விருதை தொடர்ந்து 4வது ஆண்டாக எம்ஆர்எஃப் பெறுகிறது.

மாருதி ஏ-ஸ்டார்

மாருதி ஏ-ஸ்டார்

நம்பகரமான காம்பெக்ட் காருக்கான விருதை உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்ட மாருதி ஏ ஸ்டார் பெற்றது.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

நம்பகரமான பிரிமியம் காம்பெக்ட் காருக்கான விருது ஃபோர்டு ஃபிகோவுக்கு கிடைத்தது.

 மாருதி டிசையர்

மாருதி டிசையர்

நம்பகமான என்ட்ரிலெவல் மிட்சைஸ் காருக்கான விருதை மாருதி டிசையர் பெற்றது. இந்த விருதை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாருதி டிசையர் பெறுகிறது.

 ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

நம்பகமான மிட்சைஸ் காருக்கான விருது ஹோண்டா சிட்டி காருக்கு கிடைத்தது.

செவர்லே க்ரூஸ்

செவர்லே க்ரூஸ்

நம்பகத்தன்மை மிகுந்த பிரிமியம் மிட்சைஸ் காருக்கான விருதை செவர்லே க்ரூஸ் பெற்றது.

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

மிக நம்பகமான எம்பிவி காருக்கான விருதை டொயோட்டா இன்னோவா பெற்றது. தொடர்ச்சியாக 6வது வருடமாக இந்த விருதை இன்னோவா பெறுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த எஸ்யூவி மாடலுக்கான விருதை டொயோட்டா ஃபார்ச்சூனர் பெற்றது.

 பிஎம்டபிள்யூவுக்கு விருது

பிஎம்டபிள்யூவுக்கு விருது

விற்பனைக்கு பின் வாடிக்கையாளர் திருப்தியை பெறுவதில் சிறந்த சொகுசு கார் பிராண்டுக்கான விருதை பிஎம்டபிள்யூ பெற்றது.

 மாருதி ஆல்ட்டோ 800

மாருதி ஆல்ட்டோ 800

என்ட்ரி லெவல் காம்பெக்ட் கார் செக்மென்ட்டில் சிறந்த ஆரம்ப நிலை தரம் கொண்ட காருக்கான விருதை மாருதி ஆல்ட்டோ 800 கார் பெற்றது.

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ

காம்பெக்ட் கார் செக்மென்ட்டில் சிறந்த ஆரம்ப நிலை தரம் கொண்ட காருக்கான விருதை ஹூண்டாய் சான்ட்ரோ பெற்றது.

 ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ

சிறப்பான ஆரம்ப நிலை தரம் கொண்ட காம்பெக்ட் கார் மாடலுக்கான விருதை ஹோண்டா பிரியோ பெற்றது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

ஆரம்ப நிலை தரத்தில் சிறந்த பிரிமியம் காம்பெக்ட் காருக்கான விருதை மாருதி ஸ்விஃப்ட் கார் பெற்றது.

 ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

என்ட்ரிலெவல் மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் சிறந்த ஆரம்ப நிலை தரம் கொண்ட காருக்கான விருதை ஹோண்டா அமேஸ் பெற்றது.

 ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

சிறந்த தரம் கொண்ட மிட்சைஸ் காருக்கான விருதை தொடர்ந்து 11வது ஆண்டாக ஹோண்டா சிட்டி பெற்றுள்ளது.

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்

சிறந்த பிரிமியம் மிட்சைஸ் கார்களுக்கான செக்மென்ட்டில் சிறப்பான ஆரம்ப நிலையிலான தரத்தை உடைய காராக டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது.

கவர்ச்சிமிக்க கார் மாடல்கள்

கவர்ச்சிமிக்க கார் மாடல்கள்

கவர்ச்சி மிக்க கார்களுக்கான விருதுகளை மாருதி ஆல்ட்டோ, மாருதி ரிட்ஸ், மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, செவர்லே க்ரூஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் பெற்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2014, 6:38 [IST]
English summary

 J.D. Power Asia Pacific has concurred Honda, Maruti Suzuki and MRF with special recognition awards for meeting and exceeding customer satisfaction in India continuously, year after year. Honda, Maruti Suzuki and MRF received the special recognition because they have ranked top in J.D. Power Customer Satisfaction studies at least 10 times.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+