அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய ஃபியட் கார் மாடல்கள் பட்டியல்

By Saravana

ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ்(FCA) நிறுவனத்தின் சர்வதேச முதலீட்டாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்ததது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான உலகளாவிய கொள்கை முடிவுகள் பற்றிய தகவல்கள் அந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டன. அதில், இந்தியாவுக்கான சில முக்கியமான கொள்கை முடிவுகள் மற்றும் புதிய மாடல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஜீப் பிராண்டு எஸ்யூவி விற்பனை குறித்த அறிவிப்பும் முறைப்படி வெளியாகியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஃபியட் நிறுவனம் களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள கார் மாடல்களின் விபரத்தை ஸ்லைடரில் காணாலாம்.


2014 மாடல்கள்

2014 மாடல்கள்

இந்த ஆண்டு அவென்டியூரா மற்றும் அபார்த் 500 கார்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. கிராண்ட் புன்ட்டோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இந்த ஆண்டு இறுதியில் வர இருக்கிறது.

2015ல் ஃபியட் மாடல்கள்

2015ல் ஃபியட் மாடல்கள்

அடுத்த ஆண்டு ஜீப் பிராண்டு பிரிமியம் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஃபியட். ரேங்லர் மற்றும் கிராண்ட் செரோக்கீ மாடல்கள் அடுத்த ஆண்டு லிஸ்ட்டில் இருக்கின்றன. இதில், கிராண்ட் செரோக்கீ இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும். ரேங்லர் எஸ்யூவியை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு புன்ட்டோ காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடலான அபார்த் புன்ட்டோ காரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

2016 மாடல்கள்

2016 மாடல்கள்

2016ம் ஆண்டில் சி செக்மென்ட்டில் புதிய ஜீப் பிராண்டு எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வர ஃபியட் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் பேட்ரியாட் மற்றும் காம்பாஸ் மாடல்களுக்கு இது மாற்றாக வர இருக்கிறது.

2017 மாடல்கள்

2017 மாடல்கள்

புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் மற்றும் ஜீப் கிராண்ட் செரோக்கீ மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். செரோக்கீ இந்தியாவிலும், ரேங்லர் இறக்குமதி செய்தும் விற்பனை செய்யப்படும். இதுதவிர, புதிய தலைமுறை புன்ட்டோ காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் மற்றுமொரு முக்கிய மாடல் வெளியிடப்பட உள்ளது. அது கிராண்ட் சியனா காராக இருக்கும்.

2018 மாடல்கள்

2018 மாடல்கள்

2017ல் வரும் புதிய தலைமுறை புன்ட்டோ காரின் அபார்த் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அதேவேளை, ரெனிகடே காம்பெக்ட் எஸ்யூவி இந்தியாவுக்கு வராது என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 10, 2014, 11:22 [IST]
English summary
Fiat Chrysler Automobiles (FCA), during its recently held global investors meet, explained its worldwide strategy for the next five years which also includes some interesting plans for India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+