ஜீப் பிராண்டின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி ரெனிகேட் - படங்களுடன் விபரம்!
ஜீப் பிராண்டு மீது ஆசைகொள்பவர்களின் கனவை நனவாக்கும் விதத்தில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல் ஜெனீவா மோட்டார் ஷோ மூலம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரெனிகேட் என்ற பெயரில் வரும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஜீப் பிராண்டின் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனைக்கு வரும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் ஆவலை அதிகப்படுத்துகின்றன. இந்த புதிய ஜீப் பிராண்டு எஸ்யூவியின் கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரி காணலாம்.

பிளாட்ஃபார்ம்
ஃபியட் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 500எக்ஸ் கிராஸ்ஓவர் காரும், இந்த ஜீப் ரெனிகேட் எஸ்யூவியும் ஃபியட் - க்றைஸ்லர் கூட்டணியின் புதிய பிளாட்ஃபார்மில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆஃப்ரோடர்
இந்த ஜீப் ரெனிகேட் எஸ்யூவி ஓர் முழுமையான ஆஃப்ரோடர் எஸ்யூவியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தோற்றம்
இதன் காம்பெக்ட் வடிவமும், பெட்டிப் போன்ற தோற்றமும் அனைவரையும் கவருமா என்பது சந்தேகமே. ஆனால், ஜீப் பிராண்டின் முத்திரை பதித்த கிரில் அமைப்பு இந்த காம்பெக்ட் ஆஃப்ரோடரின் மிரட்டல் தோற்றத்துக்கு பெரிதும் வலுசேர்க்கிறது.

எஞ்சின்
இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் எஞ்சின் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஜீப் ரெனிகேட் எஸ்யூவியில் ஃபியட்டின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

அறிமுகம்
அடுத்த ஆண்டு சர்வதேச அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவிலும் இந்த மாடலை ஃபியட் நிறுவனம் நிச்சயம் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








