வித்தியாசமான டிசைனில் 2 புதிய மாடல்களை அறிமுகம் செய்த டிசி டிசைன்ஸ்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நடந்த நிகழ்ச்சியில் டிசி டிசைன்ஸ் நிறுவனத்தின் புதிய எலிரான் என்ற காம்பெக்ட் எஸ்யூவி மாடலையும், டியா என்ற 2 சீட்டர் சிட்டிக் காரையும் பாலிவுட் நடிகை கரீனா கபூர் அறிமுகம் செய்தார்.
வித்தியாசமான ஸ்டைலில் வந்திருக்கும் இந்த 2 புதிய காம்பெக்ட் கார் மாடல்களும், பிரிமியம் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிரோன் எஸ்யூவி
இது ஓபன்டாப் எஸ்யூவி மாடலாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

4 சீட்டர்
இந்த காம்பெக்ட் எஸ்யூவியில் 4 பேர் செல்ல முடியும்.

அம்சங்கள்
பகல்நேர ரன்னிங் விளக்குகள், புரொஜெக்டர் விளக்குகள் போன்றவை இருக்கும்.

இருக்கை
ஸ்போர்ட்ஸ் பக்கெட் இருக்கைககள், மரவேலைப்பாடுகள் கொண்ட இன்டிரியர் கொண்டதாக இருக்கிறது.

டியா
டியா கார் நகர்ப்புறத்தில் எளிதாக சென்று வருவதற்கு ஏற்ற குட்டி கார். பார்க்கிங் செய்வதும், போக்குவரத்து நெரிசலில் செல்வதற்கும் ஏதுவான மாடல்.

ஓபன்டாப்
இதுவும் ஓபன்டாப் மாடலாகவே இருக்கிறது. எல்இடி லைட்டுகள், புரொஜெக்டர் ஹெட்லைட் இதன் சிறப்பம்சங்கள். இதிலும் ஸ்போர்ட்ஸ் பக்கெட் இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

2 சீட்டர்
இதில் இரண்டு பேர் பயணம் செய்ய முடியும்.

டிஜிட்டல் கிளஸ்ட்டர்
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொண்டுள்ளது.

விற்பனை
2016ம் ஆண்டில் இந்த புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

முதலீடு
ஒவ்வொரு கார் மாடல் தயாரிப்புக்கும் ரூ.50 கோடியை முதலீடு செய்துள்ளதாக டிசி தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் கூடுதல் முதலீடூ செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

விற்பனை இலக்கு
ஆண்டுக்கு 500 எலிரான் எஸ்யூவிகளையும், 1,000 டியா கார்களையும் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக டிசி டிசைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








