கொச்சியில் மகளிர் மட்டும் டாக்சி சேவை: உம்மன் சாண்டி துவங்கி வைத்தார்

By Saravana

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொச்சியில் மகளிர் மட்டும் டாக்சி சேவை துவங்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பில் துவங்கப்பட்டிருக்கும் இந்த சிறப்புமிக்க சேவையை அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி துவங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மாநில அரசு சார்பில் இந்த டாக்சி சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டாவதாக கொச்சியில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.


She Taxi

She Taxi

She Taxi என்ற பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இந்த புதிய டாக்சி சேவை திட்டம் பெண்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதால் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கேரள அரசின் சமூக நிதி துறை ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 பெண் ஓட்டுனர்

பெண் ஓட்டுனர்

கொச்சியில், She Taxi திட்டத்தில் முதலில் 10 மகளிர் மட்டும் கார்கள் சேவையை வழங்க உள்ளன. வரும் காலங்களில் கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்து...

அடுத்து...

கொச்சியை தொடர்ந்து கோழிக்கோட்டில் இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் 250 மகளிர் மட்டும் வாடகை கார்களை அறிமுகம் செய்ய கேரள அரசு திட்டமி்ட்டுள்ளது.

 பிரத்யேக வண்ணம்

பிரத்யேக வண்ணம்

She Taxi சேவைக்கான கார்களை மாருதி நிறுவனம் வழங்கியுள்ளது. டிசையர் மற்றும் எர்டிகா கார்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மகளிர் மட்டும் வாடகை கார்கள் எளிதாக தெரியும் விதத்தில் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற வண்ணம் கொண்டதாக இருக்கின்றன.

வசதிகள்

வசதிகள்

இந்த மகளிர் மட்டும் வாடகை கார்களில் பாதுகாப்புக்காக ஜிபிஎஸ் வசதி, எல்சிடி சிஸ்டம், அவசர கால எச்சரிக்கை சுவிட்சுகள், பாதுகாப்புக்கான பிரத்யே மொபைல் அப்ளிகேஷன் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, May 23, 2014, 9:30 [IST]
English summary
The Kerala government, on Wednesday, inaugurated the second women-only taxi service in the state in Kochi. The only one of its kind in the county, the ‘She-Taxi' service is already operational in Thiruvananthapuram since November last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+