ஏற்றுமதிக்காக கியா சோல் எலக்ட்ரிக் காரின் உற்பத்தி துவங்கியது
ஐரோப்பிய மார்க்கெட்டுக்கு செல்லும் புதிய கியா சோல் எலக்ட்ரிக் காரின் உற்பத்தி தென்கொரியாவில் உள்ள ஆலையில் துவங்கியுள்ளது. முதல்முறையாக தென்கொரிய மார்க்கெட்டைவிட்டு வெளிநாடுகளில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.
முதலில் சில ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கும் கியா சோல் எலக்ட்ரிக் கார் இந்த ஆண்டு இறுதிக்குள் பல்வேறு மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இதன்மூலம், சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய காரை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம் என்று கியா மோட்டார்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த புதிய காரின் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படும் எலக்ட்ரிக் கார்களை கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹூண்டாய் மோட்டாராஸ் நிறுவனமும் தயாரித்து வெளியிட உள்ளது. 2016ம் ஆண்டில் ஹூண்டாய் பிராண்டில் புதிய எலக்ட்ரிக் கார்கள் வர இருக்கின்றன. எனவே, இந்த புதிய கியா சோல் எலக்ட்ரிக் காரில் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

பேட்டரி
கியோ சோல் எலக்ட்ரிக் கார் மாடலில் அதிக திறன் கொண்ட 192 செல் 27 kWh லித்தியம் அயான் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், பிரேக் ஆற்றலை மறுசுழற்சி முறையில் பேட்டரியில் சேமிக்கும் நுட்பத்தையும் கொண்டுள்ளது.

ரேஞ்ச்
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் பிடிக்கும். முழு சார்ஜ் செய்துவிட்டால் 212 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

பெர்ஃபார்மென்ஸ்
0- 100 கிமீ வேகத்தை 11.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 145 கிமீ வேகம் வரை செல்லும் திறனை கொண்டுள்ளது.

உற்பத்தி திறன்
தென்கொரியாவில் உள்ள குவாங்ஜு என்ற இடத்தில் உள்ள கியா மோட்டார்ஸ் ஆலையில் ஆண்டுக்கு 5,000 சோல் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புதிய ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகமாகும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








