லம்போர்கினியின் புதிய ஹூராகென் காருக்கு கிடைத்த வரவேற்பை பாருங்கள்!!
லம்போர்கினி கல்லார்டோவின் புதிய தலைமுறை மாடலாக வரும் ஹூராகென் காருக்கு எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நகரங்களில் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த காரை நேரில் காண்பித்து வலுசேர்க்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்த ஒரு மாதத்திற்குள் ஹூராகென் காருக்கு 700 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லம்போர்கினியின் அதிகம் விற்பனையான கார் மாடலான கல்லார்டோவுக்கு மாற்றாக வரும் இந்த புதிய காருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது அந்த நிறுவனத்தை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. லம்போர்கினி கல்லார்டோவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதற்கான காரணங்களாக, அதன் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
ஹூராகென் காரில் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 610 எச்பி ஆற்றலையும், 560 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
1,422 கிலோ எடை கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் கடந்து விடும் வல்லமை பெற்றது.

மைலேஜ்
லிட்டருக்கு 8 கிமீ வரை மைலேஜ் தரும் என லம்போர்கினி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது சோதனை நிலைகளிலான மைலேஜாக இருக்கும். உண்மையான நிலையில், இந்தளவு மைலேஜ் கண்டிப்பாக இருக்காது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
இந்த காரில் 12.3 இஞ்ச் திரை கொண்ட இன்பொடோயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. காரின் இயக்கம், நேவிகேஷன் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை தருவதாக இருக்கும்.

டாப் ஸ்பீடு
லம்போர்கினி ஹூராகென் கார் மணிக்கு 325 கிமீ வேகம் வரை அதிகபட்சமாக செல்லும் ஆற்றல் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ்
ஆல் வீல் டிரைவ் கொண்ட இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

அறிமுகம் தேதி
அடுத்த மாதம் 4ந் தேதி காலை 8 மணிக்கு ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய லம்போர்கினி ஹூராகென் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் லம்போர்கினி சிஇஓ., ஸ்டீபன் விங்கிள்மேன் கலந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications








