செப்.22ல் விற்பனைக்கு வருகிறது புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார்

By Saravana

அடுத்த மாதம் 22ந் தேதி புதிய லம்போர்கினி ஹூராகென் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

லம்போர்கினியின் அதிகம் விற்பனையான கார் மாடலான கல்லார்டோவுக்கு மாற்றாக வரும் இந்த புதிய சூப்பர் கார் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

Lambo Huracan

இதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் 22ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய சூப்பர் காரில் 610 எச்பி பவரை அளிக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபரால் ஆன சேஸீ மற்றும் பாடி பேனல்கள் போன்றவற்றின் மூலம் உறுதியும் இலகு எடையும் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசக்திவாய்ந்த காரை இந்திய கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இதுவரை சர்வதேச அளவில் 1,500 முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்தியாவிலும் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள இரு லம்போர்கினி டீலர்ஷிப்புகளில் சில கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 8, 2014, 11:51 [IST]
English summary
Italian super car manufacturer Lamborghini will be getting its latest creation to India the Huracan on 22nd September, 2014. Lamborghini has launched the Huracan globally and it has to fill in the big shoes of its most successful super car till date the Gallardo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+