இத்தாலி போலீசில் புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார்!
By Saravana
இத்தாலி போலீசாருக்கு லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது தாய்நாட்டு போலீசாரின் மதிப்பை உயர்த்தும் விதத்தில் லம்போர்கினி தனது புத்தம் புதிய ஹூராகென் சூப்பர் காரை ரோந்து பணிகளுக்காக பரிசாக வழங்கியுள்ளது.
இத்தாலி போலீசாரின் அதிகாரப்பூர்வ வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிற சீருடை நிறத்திலேயே இந்த புதிய சூப்பர் கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை கல்லார்டோ சூப்பர் காரை இத்தாலி போலீசார் பயன்படுத்தினர். ஆனால், அந்த கார் ஒரு விபத்தில் முழுமையாக சேதமடைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த இடத்தை தற்போது ஹூராகென் நிரப்ப இருக்கிறது.
செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் படிக்கலாம்.
வசதிகள்
வசதிகள்
காரின் மேல்கூரையில் போலீசாரின் சைரன் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் மிக நேர்த்தியாக பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், ரோந்து பணிகளின்போது போக்குவரத்து விதிகளை மீறுவோரை பிடிக்கவும், குற்றச்செயல்களை தடுப்பதற்கான பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. ஜிபிஎஸ், கேமரா போன்றவையும் கேபினுக்குள் பொருத்தப்பட்டுள்ளது.
எஞ்சின்
எஞ்சின்
குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கு ஏதுவான காராக இதனை கூறலாம். ஏனெனில், இந்த காரில் 610 எச்பி பவரை அளிக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 322 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.
விழா
விழா
ரோம் நகரில் நடந்த விழாவில் புதிய ஹூராகென் சூப்பர் காரை இத்தாலி போலீஸிடம் லம்போர்கினி சிஇஓ., ஸ்டீபன் விங்கிள்மேன் வழங்கினார்.
ரோந்து பணி
ரோந்து பணி
இந்த ஆண்டு இறுதியிலிருந்து இந்த புதிய கார் இத்தாலி போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ!
Post by DriveSpark Tamil.
More from DriveSpark
Article Published On: Saturday, May 24, 2014, 11:40 [IST]
English summary
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+