வரும் 22ல் புதிய லம்போ ஹூராகென் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Saravana

வரும் 22ந் தேதி புதிய லம்போர்கினி ஹூராகென் கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்லார்டோவுக்கு மாற்றாக வரும் இந்த புதிய கார் மீது இந்திய கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் கேட்டறிந்து வருகின்றனர். இந்த புதிய சூப்பர் காரில் 610 எச்பி பவரை அளிக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

Lambo Huracan

அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபரால் ஆன சேஸீ மற்றும் பாடி பேனல்கள் போன்றவற்றின் மூலம் உறுதியும் இலகு எடையும் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 0- 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும் இந்த புதிய சூப்பர் கார் மணிக்கு 325 கிமீ டாப்ஸ்பீடு கொண்டது.

இதுவரை சர்வதேச அளவில் 1,500 முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்தியாவிலும் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள இரு லம்போர்கினி டீலர்ஷிப்புகளில் சில கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவென்டேடார் காரை மட்டும் இந்தியாவில் லம்போர்கினி விற்பனை செய்து வருகிறது. புதிய ஹூராகென் விற்பனைக்கு வரும்போது லம்போர்கினியின் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 12, 2014, 16:55 [IST]
English summary
Lamborghini Huracan India Launch Confirmed The Italian automobile manufacturer Lamborghini will be launching its Huracan in India on the 22nd of September, 2014. Lamborghini has already launched the Huracan in other countries across the globe. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+