லம்போ ஹூராகென் சூப்பர் காரின் ரேஸ் மாடல் அறிமுகம்!

By Saravana

லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரின் ரேஸ் மாடல் கலிஃபோர்னியாவில் நடந்து வரும் கார் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லம்போ ஹூராகென் எல்பி620-2 சூப்பர் ட்ராஃபியோ என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கும் இந்த புதிய கார் அங்கு திரண்டிருந்த கோடீஸ்வர வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹூராகென் காரில் ரேஸ் மாடலுக்கான கூடுதல் ஆக்சஸெரீஸ்களை சேர்த்து இந்த காரை லம்போர்கினி வெளியிட்டிருக்கிறது. படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


கல்லார்டோ ரேஸ் மாடலுக்கு மாற்று

கல்லார்டோ ரேஸ் மாடலுக்கு மாற்று

பிளாங்க்பெயின் ரேஸில் பயன்படுத்தப்பட்டு வரும் லம்போ கல்லார்டோ ரேஸ் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய ஹூராகென் காரின் ரேஸ் மாடலை லம்போர்கினி அறிமுகம் செய்துள்ளது.

மேட் ஃபினிஷ்

மேட் ஃபினிஷ்

இந்த கார் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. சாம்பல் வண்ணத்தில், சிவப்பு நிற கோடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் சாதாரண ஹூராகென் காரைவிட 152 கிலோ எடை குறைவானது.

ஆக்சஸெரீஸ்கள்

ஆக்சஸெரீஸ்கள்

10 நிலைகளில் மாற்றக்கூடிய ரியர் விங், ரோல் கேஜ், ரியர் டிஃபியூசர், முன்புறத்தில் கார்பன் ஃபைபர் ஸ்பிளிட்டர்கள், அட்ஜெஸ்ட்டபிள் ஏர் இன்டேக்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என பல பிரத்யேக ஆக்சஸெரீஸ்களை கூடுதலாக பெற்றுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

சாதாரண ஹூராகென் காரில் இருக்கும் அதே வி10 எஞ்சின்தான் உள்ளது. ஆனால், 10 எச்பி பவரை கூடுதலாக அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. டியூவல் கிளட்ச் கியர் பாக்ஸ் கொம்டது.

விலை

விலை

இந்த கார் 3 லட்சம் பவுண்ட் விலையில் விற்பனைக்கு உள்ளதாக லம்போ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 16, 2014, 12:59 [IST]
English summary
Italian Sports car maker Lamborghini has introduced its all-new Huracan Super Trofeo race car Friday morning at the Quail Motorsports gathering in California.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+