முதல் லம்போர்கினி எஸ்யூவி எப்போது அறிமுகம்? - சிஇஓ தகவல்!
வரும் 2017ம் ஆண்டு லம்போர்கினி உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு தயாராகிவிடும் என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் விங்கிள்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு லம்போர்கினியின் முதல் எஸ்யூவியின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் படு மிரட்டலாக இருந்த உரஸ் கான்செப்ட் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது கார் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

உரஸ் என்ற பெயரிலான இந்த கான்செப்ட்டை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளில் லம்போர்கினி ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், உரஸ் எஸ்யூவி தயாரிப்பு நிலைக்கு சென்றுள்ளதை லம்போர்கினி தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் விங்கிள்மேன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், 2017ல் உரஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








