லம்போர்கினி ஹூராகென் காரை ஓட்டிப் பார்க்க ஓர் பொன்னான வாய்ப்பு!
லம்போர்கினி ஹூராகென் போன்ற சூப்பர் கார்கள் மீது பெரும்பாலானோருக்கு அதீத ஆர்வம் இருக்கும். ஆனால், இதுபோன்ற பல கோடி மதிப்பு கொண்ட கார்களை வாங்குவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது.
இதுபோன்ற கார்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும் ஆட்டோமொபைல் பிரியர்களின் தாகத்தை தீர்க்கும் விதத்திலும், இந்த காரை வாங்க பிரியப்படும் வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் விதத்திலும் லம்போர்கினி நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ஹூராகென் காரின் காக்பிட்டில் அமர்ந்து ஓட்டுவது போன்ற ஒரு பரவச அனுபவத்தை தரும் சிமுலேட்டரை லம்போர்கினி அறிமுகம் செய்துள்ளது.
இது ஆன்லைன் சிமுலேட்டர் என்பதால், இன்டர்நெட் தொடர்பு இருப்பவர்கள் அனைவரும் இந்த காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பை லம்போர்கினி அறிமுகம் செய்துள்ளது. இது இலவசமான சேவையாக லம்போர்கினி அறிவித்துள்ளது.
இதிலும் திருப்தி ஏற்படாதவர்களுக்காக விரைவில் வீடியோ கேமையும் அறிமுகம் செய்ய உள்ளது. என்ன ஆவல் பிறந்துவிட்டதா? கீழே உள்ள லிங்கை சொடுக்கி ஆன்லைன் சிமுலேட்டருக்கு வந்துவிடுங்களேன்.
லம்போர்கினி ஹூராகென் ஆன்லைன் சிமுலேட்டர் லிங்க்!


Click it and Unblock the Notifications








