நீண்டகால பயன்பாட்டில் குறைவான பிரச்னைகள் கொண்ட நம்பகமான கார் மாடல்கள்!
நீண்டகால பயன்பாட்டில் குறைவான பிரச்னைகள் கொண்ட சிறந்த கார்கள் குறித்த ஆய்வு முடிவுகளை ஜேடி.பவர் ஏசியா பசிஃபிக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வில் மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் தயாரிப்புகள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.
கடந்த 2010ம் ஆண்டு ஜூலை முதல் 2011ம் ஆண்டு செப்டம்பர் வரை புதிய கார் வாங்கிய 8,312 உரிமையாளர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக இரண்டரை முதல் மூன்றரை ஆண்டுகள் ஓடிய கார்களில் குறைவான பிரச்னைகள் கொண்ட கார்களை தேர்ந்தெடுத்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சிறந்த மாடல்கள்
ஒவ்வொரு ரகத்திலும் நீண்ட கால பயன்பாட்டில் குறைவான பிரச்னைகள் கொண்ட முதல் மூன்று இடங்களை பிடித்த சிறந்த கார் மாடல்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் 100 கார்களில் எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

காம்பேக்ட் ஹேட்ச்பேக் ரகம்
1.ஹூண்டாய் சான்ட்ரோ (100/182)
2.மாருதி வேகன்-ஆர் (100/199)
3.மாருதி எஸ்டீலோ (100/201)
செக்மென்ட் சராசரி - (100/216)

மேல் ரக காம்பேக்ட் ஹேட்ச்பேக்
1.நிசான் மைக்ரா (100/168)
2. மாருதி ரிட்ஸ் (100/169)
3.ஃபோர்டு ஃபிகோ(100/189)
செக்மென்ட் சராசரி - (100/198)

பிரிமியம் காம்பேக்ட் ஹேட்ச்பேக்
1. ஸ்கோடா ஃபேபியா (100/120)
2.ஃபோக்ஸ்வேகன் போலோ (100/159)
3.மாருதி ஸ்விஃப்ட் (100/169)
செக்மென்ட் சராசரி - (100/179)

என்ட்ரிலெவல் மிட்சைஸ் கார் ரகம்
1.மாருதி டிசையர் (100/178)
2.டொயோட்டா எட்டியோஸ் (100/220)
3.டாடா இண்டிகோ சிஎஸ் (100/259)
செக்மென்ட் சராசரி- (100/231)

மிட்சைஸ் கார் செக்மென்ட்
1. மாருதி எஸ்எக்ஸ்4 (100/149)
2.ஹோண்டா சிட்டி (100/164)
3.ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ (100/167)
செக்மென்ட் சராசரி - (100/171)

பிரிமியம் மிட்சைஸ் ரகம்
1. ஹோண்டா சிவிக் - (100/120)
2. டொயோட்டா கரொல்லா - (100/136)
3. செவர்லே க்ரூஸ் - (100/138)
செக்மென்ட் சராசரி - (100/135)

எம்பிவி/ எம்யூவி
1. டொயோட்டா இன்னோவா - (100/221)
2. மஹிந்திரா ஸைலோ - (100- 282)
3.டாடா சுமோ/ கிராண்டே - (100- 293)
செக்மென்ட் சராசரி - (100/290)

எஸ்யூவி செக்மென்ட்
1. டொயோட்டா ஃபார்ச்சூனர் - (100/167)
2.மஹிந்திரா ஸ்கார்ப்பியோ - (100/271)
3. டாடா சஃபாரி/ சஃபாரி டைகோர் - (100/351)
செக்மென்ட் சராசரி - (100/251)

மார்க்கெட்டில் இல்லை
தமது ரகத்தில் குறைவான பிரச்னைகள் கொண்ட கார்களாக முதல் இடத்தை பிடித்த ஸ்கோடா ஃபேபியா, ஹோண்டா சிவிக் மற்றும் மாருதி எஸ்எக்ஸ்4 ஆகிய கார் மாடல்கள் தற்போது மார்க்கெட்டில் இல்லை. இதேபோன்று, மாருதி எஸ்டீலோ காரும் மார்க்கெட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேம்படும் தரம்
நீண்ட கால பயன்பாட்டில் கார்களில் ஏற்படும் பிரச்னைகள் சதவீதம் இந்தியாவில் குறைந்துள்ளதாக இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆய்வில் பங்கேற்றவர்களில் 38 சதவீதத்தினர் கார் வாங்கி மூன்று ஆண்டுகளில் எந்தவொரு பிரச்னைகளும் இல்லையென என தெரிவித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு ஆய்வில் 34 சதவீதத்தினர் காரில் பிரச்னைகளே இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதன்மூலம், கார்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை இந்தியாவில் அதிகரித்து வருவதாக ஜேடி.பவர் நிறுவனத்தின் அதிகாரி கூறினார்.


Click it and Unblock the Notifications








