ஈக்கோஸ்போர்ட், டஸ்ட்டருக்கு தனித்தனியாக கவுன்ட்டர் கொடுக்க தயாராகும் மஹிந்திரா!
ஈக்கோஸ்போர்ட், டஸ்ட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக 2 புதிய மாடல்களை மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது.
எஸ்101 மற்றும் எஸ்102 ஆகிய குறியீட்டுப் பெயர்களில் இந்த புதிய எஸ்யூவி மாடல்கள் அழைக்கப்படுகின்றன. இந்த இரு மாடல்களில் எஸ்101 எஸ்யூவி மாடல் தற்போது தீவிர சோதனையில் இருக்கிறது.

இந்த எஸ்யூவி மாடல் 4 மீட்டருக்கும் குறைவான மாடலாக இருக்கும். இது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்படும்.
அடுத்ததாக, எஸ்102 என்ற மாடல். இது எஸ்101 எஸ்யூவியை விட சற்று கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கும். ரெனோ டஸ்ட்டருக்கு போட்டியாக இது அறிமுகம் வருகிறது.
இந்த மாடல்களில் குவான்ட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும், புதிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக அறிமுகம் செய்யப்படும்.
இந்த இரு மாடல்களின் அடிப்படையில் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ!


Click it and Unblock the Notifications








