இந்தியாவுக்காக அமெரிக்காவில் தயாராகும் புதிய மஹிந்திரா எம்பிவி கார்!

By Saravana

அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த மையத்தில் புதிய வாகனங்களை வடிவமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுவிட்டது.

இதுதொடர்பாக, பிரபல வர்த்தக இதழுக்கு பேட்டியளித்துள்ள மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கோ, இந்தியாவுக்கான புதிய மாடலை வடிவமைக்கும் பணிகள் அமெரிக்க ஆராய்ச்சி மையத்தில் துவங்கிவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.


புதிய எம்பிவி மாடல்

புதிய எம்பிவி மாடல்

அமெரிக்க ஆராய்ச்சி மையத்தில் இந்தியாவுக்காக புதிய எம்பிவி கார் வடிவமைக்கப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது.

முதலில் இந்தியாவுக்கு...

முதலில் இந்தியாவுக்கு...

முதலில் இந்தியாவிலும் பின்னர் சர்வதேச அளவிலும் இந்த புதிய எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு செல்ல மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

 எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

வரும் 2017ம் ஆண்டில் இந்த புதிய எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வடிவமைப்பு நிபுணர்கள்

வடிவமைப்பு நிபுணர்கள்

அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் 35க்கும் மேற்பட்ட வடிவமைப்பு பொறியாளர்களின் உழைப்பில் இந்த புதிய எம்பிவி கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இது குளோபல் மாடலாக இருக்கும் என்று பவன் கோயங்கோ கூறியுள்ளார்.

குறிப்பு: மாதிரிக்காக மஹிந்திரா ஸைலோ படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, June 23, 2014, 10:46 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+