தூய்மை இந்தியா: குப்பைத் தொட்டியுடன் வரும் புதிய மஹிந்திரா கார்கள்!
கடந்த மாதம் 2ந் தேதி காந்தி ஜெயந்தியன்று தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து தங்கள் பங்களிப்பை அளிக்கத் துவங்கியுள்ளனர்.
முந்துங்கள்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!
இந்தநிலையில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவாக தனது கார்களில் குப்பைத் தொட்டியை வழங்குவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இருக்கை, ஜன்னல் மற்றும் ஏசி வென்ட்டுகளில் இந்த குப்பைத் தொட்டியை பொருத்திக் கொள்ளலாம்.

இந்த குப்பைத் தொட்டி சாஃப்ட் பிளாஸ்டிக் மற்றும் ஹார்டு பிளாஸ்டிக் என இரு வகைகளில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து பற்றுக் கொள்ளலாம். இதன்மூலம், பயணத்தின்போது சாலைகளில் குப்பைகளை வீசி எறிவதை தவிர்க்க முடியும்.
குறைந்த தூர பயணத்திற்கு ஏற்ற வகையில் இந்த குப்பைத் தொட்டிகள் சிறிய அளவிலானதாக இருக்கிறது. இந்த குப்பைத் தொட்டி இல்லாதவர்கள் சிறிய பைகளை பயன்படுத்தி உரிய இடத்தில் அதனை போட்டுவிடலாம்.


Click it and Unblock the Notifications








