மஹிந்திரா தார் எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

By Saravana

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா தார் அட்வென்ச்சர் எடிசன் என்ற லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அட்வென்ச்சர் எடிசன் மாடலில் மொத்தம் 30 தார் எஸ்யூவிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் இந்த எஸ்யூவியின் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.

Mahindra Thar

தார் அட்வென்ச்சர் எடிசன் மாடல் ஜாவா பிரவுன் என்ற பழுப்பு வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பாடி முழுவதும் அட்வென்ச்சர் எடிசன் என்பதை காட்டும் வகையில் டீகெல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், முன்புற வீல் ஆர்ச்சுக்கு மேலாக அட்வென்ச்சர் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய ஹெட்லைட்டுகள், டெயில்லைட்டுகள், வீல் ஆர்ச் எக்ஸ்டென்ஷன் கிட், குரோம் பூச்சு கொண்ட பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேடியேட்டர் சாஃப் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அட்வென்ச்சர் எடிசன் பேட்ஜ் கொண்ட இருக்கைகள் வசீகரிக்கிறது.

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 247என்எம் டார்க்கையும் வழங்கும் 2.5 லிட்டர் சிஆர்டிஇ டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இது 4 வீல் டிரைவ் ஆப்ஷனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தார் 4 வீல் டிரைவ் மாடலைவிட இந்த லிமிடேட் எடிசன் மாடல் ரூ.20,000 வரை கூடுதலான விலையில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, October 27, 2014, 9:09 [IST]
English summary
The Indian manufacturer Mahindra is now introducing a new treat for its off-road fans. Mahindra has introduced its new Thar Adventure Edition, which will sport additional features and gadgets compared to the regular models. The manufacturer will be providing only 30 models of this Adventure Edition. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+