மஹிந்திரா கார்களுக்கான அதிரடி தள்ளுபடி சலுகைகள் விபரம்
கார் விற்பனையை ஊக்குவிக்க முன்னணி கார் நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகளை வழங்கி வருகின்றன. அநத் வகையில், பருவமழை கால சலுகைகளை தொடர்ந்து இந்த மாதமும் வழங்குகிறது மஹிந்திரா. வரும் 31ந் தேதி வரை இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலான சேமிப்பை இந்த சிறப்பு சலுகைகள் மூலம் பெறும் வாய்ப்பு இருக்கிறது. மஹிந்திரா மாடல்களுக்கு மட்டுமின்றி, சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவிக்கும் தள்ளுபடி சலுகையை பெறலாம்.

சலுகை விபரம்
விலையில் தள்ளுபடி, இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை ஒவ்வொரு கார் மாடலுக்கும் மஹிந்திரா வழங்குகிறது. ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு தள்ளுபடி பெறலாம் என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

பொலிரோ
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலான மஹிந்திரா பொலிரோவுக்கு ரூ.25,000 வரையிலான சலுகைகளை பெறலாம்.

குவான்ட்டோ
குவான்ட்டோ காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு ரூ.44,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெறலாம்.

ஸ்கார்ப்பியோ
ஸ்கார்ப்பியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரும் தருவாயில் இருப்பதால், ரூ.60,000 சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

வெரிட்டோ வைப்
வெரிட்டோ வைப் காருக்கு ரூ.40,000 வரையிலான சலுகைகளை பெறலாம்.

ஸைலோ
ஸைலோ எம்பிவி காருக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலான சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

எக்ஸ்யூவி 500
எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு ரூ.25,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

சாங்யாங் ரெக்ஸ்டன்
சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவிக்கு ரூ.35,000 மதிப்புடைய சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கூடுதல் விபரம்
கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள மஹிந்திரா டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








