புதிய எஸ்யூவி, எம்பிவி மாடல்களை வடிவமைக்கும் மஹிந்திரா!

சரிந்து வரும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக புதிய எஸ்யூவி மற்றும் எம்பிவி மாடல்களை வடிவமைக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கியுள்ளது. இதற்கான அனுமதியை அந்த நிறுவனத்தின் நிர்வாகம் சமீபத்தில் வழங்கியுள்ளது.

மூன்று புதிய எஸ்யூவி மாடல்களையும், 3 எம்பிவி மாடல்களையும் வடிவமைக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கிவிட்டது. காம்பெக்ட் ரக எஸ்யூவி மற்றும் எம்பிவி மார்க்கெட்டுகளில் புதிய மாடல்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன.

 டிசைன் புதுசு

டிசைன் புதுசு

இந்த புதிய மாடல்கள் அனைத்தும் புத்தம் புதிய டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களுக்கும் இந்த புதிய மாடல்களுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கும்.

 எம்பிவி மாடல்கள்

எம்பிவி மாடல்கள்

புதிய எம்பிவி மாடலை சாங்யாங் எக்ஸ்100 அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது மாருதி எர்டிகாவுக்கு போட்டியாக இருக்கும்.

 எஸ்யூவி மாடல்கள்

எஸ்யூவி மாடல்கள்

இந்த புதிய மாடல்களில் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் விலையில் இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை நிலைநிறுத்தவும் முடிவு செய்துள்ளது. மேலும், புதிய தலைமுறை ஸைலோவை வடிவமைக்கும் பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

எப்போது அறிமுகம்

எப்போது அறிமுகம்

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2016ம் ஆண்டின் துவக்கத்தில் இந்த புதிய மாடல்கள் மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மார்க்கெட் போச்சே

மார்க்கெட் போச்சே

கடந்த சில மாதங்களாக மஹிந்திராவின் மார்க்கெட் பங்களிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. எக்ஸ்யூவி500 மற்றும் குவான்ட்டோ போன்ற எந்தவொரு மாடலின் விற்பனையும் திருப்திகரமாக இல்லை. எனவே, புதிய மாடல்களை வடிவமைப்பதில் மஹிந்திரா அவசரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2014, 10:55 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+