ஏஎம்டி கியர்பாஸுடன் வரும் குவான்ட்டோ: எப்போது அறிமுகம்?
அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட புதிய மஹிந்திரா குவான்ட்டோ மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த ஏஎம்டி குவான்ட்டோ மாடல் 1.2லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக இருந்தது.

ஆனால், தற்போது தீவிர சோதனையில் இருந்து வரும் மாடல் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக தெரிய வருகிறது. இந்த எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 240என்எம் டார்க்கையும் வழங்கும்.
இந்த புதிய ஏஎம்டி கியர்பாக்ஸை இங்கிலாந்தை சேர்ந்த ரிகார்டோ மற்றும் மஹிந்திரா இணைந்து தயாரித்துள்ளன. இந்த புதிய எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும் என்பதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த புதிய ஏஎம்டி மாடலை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








