செப்.25ல் விற்பனைக்கு வரும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட்!

By Saravana

வரும் 25ந் தேதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

2002ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் இதுவரை எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Mahindra Scorpio

டஸ்ட்டர் உள்ளிட்ட புதிய மாடல்களின் வரவு மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு சிறிய நெருக்கடியை தந்தது. இருப்பினும், விற்பனையில் சளைக்காமல் போட்டி போட்டு வருகிறது.

இந்தநிலையில், ஸ்கார்ப்பியோவில் டிசைன் மாற்றங்களை செய்து புதுப்பொலிவுடன் மஹிந்திரா களமிறக்குகிறது. கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டத்தில் இருந்து வந்த இந்த மாடலை வரும் 25ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்திலும் பல மாற்றங்களுடன் வருகிறது ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல். வழக்கமாக மஹிந்திரா வாகனங்களில் இருக்கும் பல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும்.

இதனால், புதிய ஸ்கார்ப்பியோ மாடல் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மாடலைவிட ரூ.30,000 வரை கூடுதல் விலையில் ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 13, 2014, 10:21 [IST]
English summary
According to reports, The new Mahindra Scorpio facelift is set to make its entry into the domestic market on 25th September.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+