உலகின் முதல் டீசல் ஹைபிரிட் எஸ்யூவியை அறிமுகப்படுத்திய மஹிந்திரா!

புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 500வின் ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவியில் ஏற்கனவே மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம் உள்ளது. ஆனால், ஓர் முழுமையான ஹைபிரிட் மாடலாக இந்த புதிய காரை பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இதுதான் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட உலகின் முதல் டீசல் ஹைபிரிட் மாடலாக குறிப்பிடப்படுகிறது. இதுதவிர, குவான்ட்டோ எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விசேஷ கட்டமைப்பு

விசேஷ கட்டமைப்பு

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி ஹைபிரிட் மாடலின் எஞ்சின் அறை வெளியில் தெரியும் வகையில் கண்ணாடியில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

ஹைபிரிட் சிஸ்டம்

ஹைபிரிட் சிஸ்டம்

இந்த புதிய எக்ஸ்யூவியின் டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும், பெர்ஃபார்மென்சையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பூஸ்ட் கொடுக்கும்

பூஸ்ட் கொடுக்கும்

குறைந்த வேகத்தில் செல்லும்போது டீசல் எஞ்சினுடன் இணைந்து எலக்ட்ரிக் மோட்டார் துணைபுரியும் என்பதால், அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக இருக்கும்.

குவான்ட்டோ ஆட்டோமேட்டிக்

குவான்ட்டோ ஆட்டோமேட்டிக்

மாருதி செலிரியோ போன்றே கிளட்ச்லெஸ் மேனுவல் கியர் ஷிப்ட் கொண்ட மாடலையும் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.

நகர்ப்புறத்துக்கான மாடல்

நகர்ப்புறத்துக்கான மாடல்

நகர்ப்புற பயன்பாட்டுக்கு புதிய குவான்ட்டோ ஆட்டோமேட்டிக் சிறப்பானதாக இருக்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது.

 எலக்ட்ரிக் ரேஸ் கார்

எலக்ட்ரிக் ரேஸ் கார்

இந்த ஆண்டு துவங்க இருக்கும் எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 ரேஸில் மஹிந்திராவும் களமிறங்குகிறது. இதற்கான, தனது ரேஸ் காரையும் மஹிந்திரா பார்வைக்கு வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2014, 13:21 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+